Ticker

6/recent/ticker-posts

பொதுபலசேனா முஸ்லிம் மக்களிடம் இனி சேட்டை விட்டால் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம், சந்திரிகா!


பொதுபலசேனா முஸ்லிம் மக்களிடம் இனி சேட்டை விட்டால் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம், முஸ்லிம் மக்கள் இந்த புதிய அரசை நிறுவ பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் இப்படி கூறியுள்ளாா் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார்.

இன்று திஹாரி கண்டி வீதியில்  இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்கிய முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் சிறுபான்மையினர் சகலரும் இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து தமது வாக்கை அளித்துள்ளனர். இதுவே இலங்கை தேசத்துக்கு கிடைத்த வெற்றியாகும். நாம் இலங்கை தீவில் வாழும் சகல இனத்தையும் இலங்கையர் என்ற சிந்தனைக்குள் வாழ்கிறோம் இனியும் இதுவே நடக்கும், தொடர்ந்து உங்கள் ஆதரவு எமக்கு தேவை என்றும் சந்திரிகா அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Post a Comment

0 Comments