பேராதனை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் ஒரு மாணவன், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாா். இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் இன்று (21) குறித்த மாணவனின் சடலம் மகாவலி கங்கையிலிலருந்து மீட்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கன்னோருவ பிரதேசத்தில் ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த .நிலையில் இவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அஞ்சன குலதுங்க (வயது 23) என்ற மாணவனை காணவில்லையென்று அவாின் பெற்றோா் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
மாணவன் தங்கியிருந்த அறையை பொலிசார் சோதனையிட்டபோது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவா் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படும் அந்த மாணவன் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் மகாவலி ஆற்றில் குதிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், சில காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்ததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மற்றுமொரு மாணவனும் மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments