உடல்நலனைப் பாதுகாக்கும் பல பொருட்களை இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. அதில் இந்த மஞ்சளும் ஒன்று. மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் பொருள் அலெசைமர் எனும் மூளை சம்பந்தப்பட்ட நோயினை தடுப்பதில் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது. மஞ்சள் நமது உடலின் நச்சுத்தன்மையினைக் குறைத்து, புரதச்சத்தினை ஒருங்கிணைக்கத் தொடங்குவதால் இந்த நோயினால் ஏற்படும் நியூரான்களின் இழப்பினைத் தடுக்கிறது என இதனை ஆய்வு செய்த வெல்லிங்க்டன் பாம் தெரிவித்துள்ளார்.
சிறு சிறு மூலக்கூறுகளை உருவாக்கி இந்த நோயின் தாக்கத்தினைக் குறைப்பது மிக முக்கியமானது. ஆனால் இந்த சிறு மூலக்கூறுகள் இரத்தத்திற்கும் மூளைக்கும் இடைப்பட்ட தூரத்தினை தாண்டி செல்வது கடினம். ஏனெனில், இந்தப் பகுதியில் வெளியிலிருந்து செலுத்தப்படும் மருந்துகள் எதுவும் அனுமதிக்கப்படாது. பாம் மற்றும் அவருடன் ஜப்பானில் ஷிகா பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் இணைந்து படித்த ஒருவர் இணைந்து நடத்திய ஆய்வில் குர்குமின் படலத்தினை மூளைப்பகுதிக்கு அருகில் கொண்டு செல்வதென தீர்மானித்தனர். அதற்கான புது வியூகங்களை வகுக்கத் தொடங்கினர்.
இந்த குர்குமின் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மஞ்சளில் உள்ளது. சரியான அளவில் அவற்றினை பயன்படுத்துவதன் மூலம் மூளை நோயான அலெசைமர் குறைக்கப்படும். அப்படி இயற்கையினை சரியாக பயன்படுத்தாவிட்டால் செயற்கையான மருத்துவப் பொருளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.இதற்காக அவர்கள் ஒரு நுண்பொருள் உருவாக்கியினை உடலினுள் உருவாக்க வேண்டும் எனவும், அது குர்குமின் படலத்தினை தொடர்ந்து உருவாக்கும் எனவும் தீர்வு கூறினர். அதற்காக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து குர்குமின் போன்றதொரு மூலக்கூறினை உருவாக்கினர் அதன் பெயர் FMeC1. அதைத்தான் இந்த ஆய்வு முழுவதும் பயன்படுத்தவும் செய்தனர்.

0 Comments