Ticker

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது தலிபான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் பிராந்தியத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது நேற்று தலிபான்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.   3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தலிபான் தாக்குதலுக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ படை உள்நாட்டு பாதுகாப்பை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே ஆப்கான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் ராணுவம் மற்றும் பொலிசிடம் ஒப்படைத்துவிட்டு, நேட்டோ படை பாதுகாப்பு பொறுப்பில் இருந்து விலகியது. இதைத் தொடர்ந்து, சில மாதங்களாக பல்வேறு பிராந்தியங்களில் ஆப்கான் ராணுவம் மற்றும் போலீஸ் மீது தலிபான்கள் படிப்படியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கே குந்தூஸ் பிராந்தியத்தில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று தலிபான்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள்.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பொலிஸ் நிலையம் மீது மோதி வெடிக்க வைத்தனர். இத்தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி பலியானார். இருதரப்பில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலின்போது 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்று ஆப்கான் உள்துறை செய்தி தொடர்பாளர் சித்திக் சித்திக்கி கூறினார்.
இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இத்தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் நங்கர்ஹார், பிராந்திய பெண் கவுன்சிலர் அங்கேசா சின்வாரி ஜலாலாபாத்தில் பள்ளி அருகே காரில் சென்றபோது, சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இத்தாக்குதலில் சின்வாரியின் கார் டிரைவர் பலியானார்.
சின்வாரியும் மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.
உள்நாட்டு பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் தலிபான்களின் நடவடிக்கை தொடர்ந்தால், அவர்களுக்கு ஆப்கான் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று அஷ்ரப் கானி நேற்றிரவு எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments