Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவிற்கான விளக்கமறியல் நீடிப்பு

சுயதொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான மஹிந்த கஹந்தகமகே உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.  

சம்மேளத்தின் தலைவர், செயலாளர் சாந்த அசோக ஹெட்டியாராச்சி மற்றும் பொருளாளர் எல். குமார டி சில்வா ஆகியோருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டவே அந்த மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நடைபாதை வியாபாரிகள், நடமாடும் வியாரிபாரிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் விற்பனை செய்வோரிடம் சட்டவிரோதமான முறையில் பணம் அறவிட்ட குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே அந்த மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  கொழும்பு மாநகர சபை ஆணையாளர், மாநகர சபையின் பொருளாளர் ஆகியோரை சாட்சியளிப்பதற்கு சமூகமளிக்குமாறும் நோட்டிஸ் விடப்பட்டுள்ளது.  மாளிகாவத்தை போதிராஜராம்யபதி ஊவாதென்னே சுமன தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 50ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் நாளொன்றுக்கு கப்பமாக பெற்றுள்ளனர். வீதியோரங்களில் இருக்கின்ற 289 கடைகள் மற்றும் 539 கடைகளிலேயே இவர்கள் கப்பம் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments