புலனாய்வுப் பிரிவினருக்கு எவ்வித வாக்கு மூலங்களையும் அளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களான அவான்ட் க்ரேட் மற்றும் ரக்ன லங்கா ஆகிய நிறுவனங்களின் ஆயுதங்கள் தொடர்பில் கோத்தபாயவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
கோத்தபாய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹானவில் உள்ள வீட்டிற்கு சென்று
புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டனர்.
ஆவணங்களை பார்வையிட்டதன் பின்னரே இது குறித்து வாக்கு மூலம் அளிக்க முடியும் என கோதபாய ராஜபக்ச தெரிவித்தார் என அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், இவ்வாறான வாக்குமூலங்கள் எதுவும் பதியப்படவில்லை என கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வேண்டுமென சில தினங்களுக்கு முன்னதாக புலனாய்வுப் பிரவினர் அறிவித்தனர்.
எதிர்வரும் வாரத்தில் வார நாள் ஒன்றில் வாக்கு மூலம் அளிப்பதாக தெரிவித்தேன்.
நேற்று இவ்வாறான எந்தவொரு வாக்குமூலமும் பதியப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments