தமது குடும்பத்தினரிடம் லம்போர்கினி வாகனம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவின் வழக்கு விசாரணைக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, யோஷித ராஜபக்ஸ பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதுகாப்பு அமைச்சிடம் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் தனது சொந்த விடயங்களுக்காக வௌிநாடு சென்றிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பதிலளித்தார்.அத்துடன், தமது சகோதரர் யோஷித ராஜபக்ஸ நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments