கோத்தபாயவின் ஆலோசனையின் கீழ் கொழும்பு 07 – சுதந்திர சதுக்கவலயத்தில் ஆர்கெட் என்ற பெயரில் இந்த வர்த்தக நிலையங்களை கடந்து வருடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார். ஆர்கெட் இன்டிபெண்டன் வலயம் என்ற பெயரில் சுமார் 5 வர்த்தக நிலையங்கள் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டன.
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து குறிப்பாக முல்லைத்தீவு காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பெறுமதி வாய்ந்த மரத்தளபாடங்களைப் பயன்படுத்தியே இந்த வர்த்தக நிலையங்களின் கதவுகள், ஜன்னல்கள், மாடிப்படிகள், மாடிகளுக்கான தளங்கள் என்பன அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த 5 வர்த்தக நிலையங்களினால் இதுவரை ஒரு கோடியே 36 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. பெருநஷ்டத்தினால் குறித்த வலயத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் சில தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments