Ticker

6/recent/ticker-posts

மதீனாவில் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்க பீரங்கி !

22 வருடங்களுக்குப் பிறகு மதீனா பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிப்பதற்காக பீரங்கி பயன்படுத்தப்படவிருக்கிறது. இதற்கான உத்தரவை இளவரசா் பைசால் பின் ஸல்மான் வழங்கியுள்ளாா்.


உதுமானிய கிலாபத் காலம் முதல்  ரமழான் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பீரங்கியின் மூலம் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்கும் முறை 22 வருடங்களுக்கு முன்னா் நிா்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

ரமழான் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் இரண்டு மதீனாவில் இருப்பதாக அறிய வருகிறது. ஒன்று மஸ்ஜிதுன் நபவியிவிற்கு 500 மீற்றா் தொலைவிலுள்ள சல் மலை உச்சியிலும், மற்றையது குபாவுக்கு அண்மையிலுள்ள துருக்கி கோட்டையிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

சஹா் நேரத்தையும், நோன்பு துறக்கும் நேரத்தையும் உதுமானிய காலம் தொட்டு அறிவித்துக் கொண்டிருந்த இந்த பீரங்கிகள் 22 வருடங்களின் பின்னா் மீண்டும் செயற்படவிருப்பதாக அறப் நிவுஸ் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

உதுமானிய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை இலங்கையிலும் செயற்பட்டு வந்திருக்கிறது. கொழும்பு பொிய பள்ளிவாசல் முன்றலில்  அன்று பயன்படுத்தப்பட்ட இத்தகைய பீரங்கி ஒன்றை இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது.

Post a Comment

0 Comments