மியன்மாரின் கடந்த 25 வருடக் காலப் பகுதியில் முதல் தடவையாக எதிர்வரும் நவம்பர் எட்டாம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டின் மூத்த தேர்தல் அதிகாரியொருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் ஆங் சான் சூ சீ தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனச் சிறுபான்மையினருக்கான கட்சிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பல கட்சிகள் இந்தத் தேர்தலில் பங்கேற்கக்கூடும்.
ஆங் சான் சூ சீயின் கட்சி 1990ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவுகள் ராணுவ ஆட்சியாளர்களால் ஏற்கப்படவில்லை.
2010ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூ சீ தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்பதால், அவரது கட்சி தேர்தலைப் புறக்கணித்தது.
மியான்மர் நாட்டின் தேர்தல் விதிகளின்படி, சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆங் சான் சூ சீ வீட்டுக்காவலில் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 2009ல் அவர் தண்டிக்கப்பட்டார். 2010ன் பிற்பகுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் கால் பங்கு இடங்கள் இன்னமும் ராணுவத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டில், 2010ஆண்டிலிருந்து சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

0 Comments