வீட்டுப் பணியாளரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவிடம் 3 மணித்தியாலங்கள் வரையில் இரகசிய பொலிஸாா் விசாரணை நடத்தியுள்ளனர்.
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், நீதியரசரிடம் இருந்து துப்பாகியும் நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 27ம் திகதி பாதிக்கப்பட்டவரால் கல்கிஸ்ஸை காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த நீதியரசரிடம் வாக்குமூலம் பெற அவரது வீட்டுக்கு காவற்துறையினர் சென்ற போதும், வாக்கு மூலம் வழங்க அவர் மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சட்டத்தரணியுடன் சரணடைந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியரசர் சரத் அப்ருவிற்கு பிணை வழங்கப்பட்டமை, கல்கிஸ்ஸை பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீனின் பக்கச்சார்பான செயற்பாடு என்று, சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிரயசர் சரத் ஆப்றூ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போது சட்ட மா அதிபர் இந்த விடயத்தை கூறினார்.

0 Comments