Ticker

6/recent/ticker-posts

துமிந்த சில்வாவுக்கு இரண்டு மில்லியன் வழங்கினேன்: வெலே சுதா சாட்சியம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக கடனாக இரண்டு மில்லியன் ரூபாவை வழங்கியதாக வெலே சுதா என்ற கம்பள விதானகே சமந்த குமார இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வெலே சுதாவுக்கு எதிரான வழக்கை தினமும் விசாரணை செய்து துரிதமாக முடிப்பது என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன நேற்று தீர்மானித்தார்.
நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்த வெலே சுதா,

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் நான் வேலை செய்தேன். அப்படி வேலை செய்து கொண்டிருந்த போது, தேர்தலுக்காக இரண்டு மில்லியன் ரூபாவை கடனாக கொடுத்தேன்.
தேர்தலுக்கு வழங்கிய பணத்தை நான் திரும்ப கேட்டதும், தினமும் வெள்ளை வானும், காவற்துறையினரும் எனது வீட்டு வர ஆரம்பித்தனர் என கூறினார்.
மேல் நீதிமன்றத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வெலே சுதாவிடம் அரச சட்டத்தரணி விசாரணை செய்துள்ளார்.

Post a Comment

0 Comments