Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 46 அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, 46 கட்சி அமைப்பாளர்கள்அவர்களின் நிலையில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதில், பெரும்பாலானோர் அண்மையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் பேரணியில்பங்கேற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமையன்று கொழும்பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்மத்திய செயற்குழு, கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையைஎடுப்பது என்று தீர்மானித்தது.

இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் கட்சி உறுப்புரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த ரணதுங்கவுக்கு எதிராகவும்ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை கூட்டத்தின்போது கருத்துரைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, சனத் நிசாந்தவின் கட்சி உறுப்புரிமை ரத்துச்செய்யப்படும், அதேநேரம்பிரசன்ன ரணதுங்க கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று குறிப்பிட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilwin

Post a Comment

0 Comments