Ticker

6/recent/ticker-posts

மியன்மாரில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்திலும் உணரப்பட்டுள்ளது

மியன்மாரில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
மியன்மாரின் மேற்கில் 25 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சாவுக் எனும் பகுதியில் 84 கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடமான பேகன் பகுதிக்கு அண்மையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை.
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் கட்டிடங்கள் குலுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நில அதிர்வு காரணமாக இந்தியாவில் நிலக்கீழ் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்களாதேஷில் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் இருந்து வெளியேற முயன்றபோது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. Newsfirst

Post a Comment

0 Comments