Ticker

6/recent/ticker-posts

பதுளை “முஸ்லிம் கல்வி” உயரதிகாரிகளின் உரிய கவன ஈர்ப்பை பெறவில்லை ! கல்லூரி அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில், மாகாண முதல்வர் முன்னிலையில் காட்டாமாக எடுத்திறைப்பு -

(வாஹிட் அப்துல் குத்தூஸ் )

பதுளை ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்காக புதிதாக நிமானிக்கப் பட்ட தொழுகை அறை மற்றும் பல்தேவை கட்டிடத் தொகுதி திறப்புவிழா,பாடசாலை சாதனையாளர் பாராட்டுவிழா , மற்றும் க,பொ,த, (உ/தர) ஆரம்ப நிகழ்வு ஆகியவை முப்பெரு விழாவாக ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.  பாடசாலை அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் திரு சாமர சம்பத் தசநாயக அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக  அல் புர்கான் – கல்வி,மற்றும் மனித நேய சேவைகளுக்கான  அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான , கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளருமான மௌலவி அல் ஹாஜ் தௌவபிக் அவர்களும் , ஊவா மாகாண சபை உறுப்பினர் திரு ருத்ர தீபன் வேலாயுதம் அவர்களும்  பங்கேற்றிருந்தார்கள் .


இக்கூட்டத்தில் தலைமையுரையையும் வரவேற்புரையையும் ஒருசேர நிகழ்த்திய பாடசாலை அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ கல்வி அதிகாரிகளால் “கோழிக்கூடாக” ஏளனமாக சித்தரிக்கப் பட்ட எமது பதுளை ப/ பாத்திமா  முஸ்லிம் மகளிர் கல்லூரி , மிகக் குறுகிய காலத்தில் பல இமாலய சாதனைகளை தன்னகத்தே கொண்டு ஏனைய பிரபல பலம் பெரும் பாடசாலைகளுடன் சரிநிகர் சமானமாக இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. பதுளை வலய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிப் போட்டியொன்றில் எமது கல்லூரியூடாக முப்பது மாணவிகள் பங்கேற்று அதில் இருபத்தி இரண்டு பேர் முதலாம் இடத்தினை பெற்று மொத்தம் இருபத்தி எட்டு பேர் வெற்றி நிலைகளை கொண்டுவந்தார்கள் .  

         இது எமது கல்லூரியில் ஈரூடக (bilingual ) மொழி மூலம் கற்பித்தல் ஆரம்பித்ததன் பிரதிபலனாக கருதுகின்றேன். மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களே ,  இந்த நிகழ்வை மாற்றத்தின் ஒரு அடையாளமாக இவ்விடத்தில் பெருமையுடன் சுட்டிக் காட்டும் நான்,  பல இன்னல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்து சுமார் ஐந்து வருட குறுகிய கால வரலாற்றில் எமது கல்லூரியின் சாதனைகளின் சில உச்சங்களை உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன் . 
    
ü  கடந்த இரண்டு வருட காலங்களாக பயிற்றுவிக்கப்பட்ட எமது கல்லூரியின் ஒன்பது மாணவிகளும் க,பொ,த, உயர்தரத்திற்கு தகுதி பெற்று சிறந்த பெறுபேறாக 8 A ,1B யை பெற்றமை.

ü  இவ்வருடம் (2016) புதிதாக ஆரம்பிக்கப் படவுள்ள க,பொ,த, உயர்தரத்திற்கு சுமார் 25 மாணவிகள் பதுளை மாவட்டத்தின் பிரபல்யமான பாடசாலைகளில் இருந்து எமது பாடாலையை நம்பி வந்து சேர்ந்துள்ளமை.

ü  57 மாணவிகளுடன் ஆரம்பித்த எமது கல்லூரி இன்று முன்னூறுக்கும் (  300) மேல் மாணவிகளை கொண்டுள்ளமை.

ü  கடந்த 2014 , 2015 ஆண்ண்டுகளுக்கான தேசிய மட்ட போட்டிகளில்  சுமார் 27 மாணவிகளுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை.

ü  2015ம் ஆண்டிற்கான   தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் 5 ம் இடத்திற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டமை.

ü  எமது கல்லூரி மாணவிகளுக்காக ஆறஅம்பிக்கப் பட்ட பாத்திமா அஹதியா பாடசாலை கடந்த இரண்டு வருடங்களாக தலா இருபத்தி ஐந்து மாணவிகள் பரீட்சைக்கு தோன்றி அனைத்து மாணவிகளும் சித்தி பெற்று அதில் ஆறு மாணவிகள் மூன்று பாடத்திலும் ஏ சித்திகளை பெற்று ஊவா மாகாணத்தின் முதல் நிலை அகதியா பாடசாலையாக தெரிவாகி யுள்ளமை.  
             
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே ,மேற்சொன்ன எமது முயற்சிகளின் பலன்களை அடைய நாம் கடந்து வந்த பாதை மிக இலகுவானதாக இருக்க வில்லை . அதில் இப்பாடசாலை வரலாற்றில் என்றைக்குமே மறக்க முடியாததொரு  சோக நிகழ்வாக எமது பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த சுமார் 90 மாணவிகளை மீண்டும் அல் அதான் ம வியில் கொண்டு சேர்த்தார்கள் . அப்போது 147 மொத்த மாணவிகளை கொண்டிருந்த எமது கல்லூரி வெறும் 57 மாணவிகளை கொண்டு மீண்டும் ஆரம்பித்திலிருந்து பயணிக்க  வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப் பட்டோம் .

Post a Comment

0 Comments