காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெல்லட் துப்பாக்கிகளுக்குப் பதிலாக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார். காஷ்மீரில் அமைதி நிலவ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ராஜ்நாத் சிங், காஷ்மீரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இல்லை என்றால் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
காஷ்மீரின் பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை காக்க முன் நிற்கும் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 48 நாட்களாக காஷ்மீரில் நிலவும் பதட்டம் காரணமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
காஷ்மீர் மக்கள் அமைதியையே விரும்புவதாக அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்குடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 5 சதவீதத்தினரே வன்முறைப் பாதையை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ns7.tv

0 Comments