இந்தியா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார். டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி கூறியதில் முக்கியமான 5 பாயிண்டுகளை இங்கே பாருங்கள்: ஜியோவில் டிசம்பர் 31ம் தேதிவரை அனைத்து உள்ளூர், உள்நாட்டு அழைப்புகளும்
வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம். வெல்கம் ஆஃபர் மூலமாக வரும் டிசம்பர் 31ம் தேதிவரை ஹெச்டி வீடியோ அழைப்புயும் இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியாவில் 90 சதவீதம் பேர் ரியோ வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்கிறார் முகேஷ் அம்பானி. ரூ. 1500 மதிப்புள்ள ஜியோ ஆப்புகள் அத்தனையையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பிற செல்போன் சேவை நிறுவனங்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை 250 ரூபாய் என்ற அளவில் தரும் நிலையில், உலகிலேயே குறைந்த கட்டணமாக, 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்க்கு தர உள்ளது. நாட்டில் எங்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பின் மூலம், பிற செல்போன் நிறுவனங்களும், ரோமிங் கட்டணத்தை கட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் சிம்கார்டு கிடைக்கும்.
0 Comments