Ticker

6/recent/ticker-posts

மஹரகம அபேக்ஷசா மருத்துவ மனைக்கு 20 கோடி சேகரித்தும் PET ஸ்கேன் இயந்திரம் இன்னும் இல்லை! ஒளிந்திருக்கும் ஊழல் என்ன?

மஹரகம அபேக்ஷசா மருத்துவ மனைக்கு தேவையான PET ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்தவற்காக 20 கோடி ரூபாய்களை பொதுமக்களிடமிருந்து திரட்டிக்கொடுத்த போதும், இன்னும் அந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபடாமல் இருப்பதாக அறிய வருகிறது.

திரட்டப்பட்ட பணம் சுகாதார அமைச்சிக்கு கையளிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் இதுவரை குறித்த ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்வதில் அதிகாரிகள் அசிரத்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவ மனைகளில் இந்த பரிசோதனைக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிடவேண்டியிருப்பதால் நோயாளிகளின் நலன் கருதி சுமார் 100 நாட்களில் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த Pet Scan இயந்திரம் மஹரகம அபேக்ஷசா மருத்துவ மனைக்கு கிடைக்கப்பபெற்றால் பல தனியார் மருத்துவ மனைகளுக்கு வருவாய் குறையும் சந்தர்ப்பம் ஏற்படும் என்ற காரணத்தினால் ஒரு சில சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்வதில் தாமதம் காட்டுவதாக சந்தேகம் எழுகிறது.

நாளுக்கு நாள் அரச மருத்துவ சேவைகள் தரம் குன்றிவருவதும், அரசாங்க மருத்துவ மனைகளில் ஒரு சிறிய பரிசோதனையைக் கூட செய்யாமல் தனியார் மருத்துவ மனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி பரிசோதனைகளை செய்து வருமாறு வேண்டுவதும் இப்போது அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில்  தனியார் மருத்துவ மனைகளுக்கு வியாபாரத்தை அதிகப்படுத்தி கமிஷன் பெறும் சுகாதார சேவை அதிகாரிகளின் ஊழல் செயற்பாடுகள் இருக்கலாம் என்றும் என்றும் நம்பப்படுகின்றது.

Post a Comment

0 Comments