Ticker

6/recent/ticker-posts

போதைப்பொருளற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

மொத்த மக்களையும் அழிவுக்குட்படுத்தி நாட்டு மக்களை வறுமைக்குள்ளாக்கும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாரிய மக்கள் கருத்தை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
 யுத்த பீதியிலிருந்து விடுதலை பெற்ற வடக்கு மக்கள் மோசமான போதைப்பொருள் பாவனையால் பெரிதும் பாதிப்பிற்குட்பட்டிருப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 
 யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்காவில் 'போதையற்ற நாடு' என்ற தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் 8வது மாவட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
 
அங்கு சென்ற ஜனாதிபதி மங்கள விளக்கேற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகமும் யாழ்மாவட்ட செயலகமும் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்து. 
 
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் போதையற்ற நாடொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்து நாட்டையும் இனத்தையும் கட்டியெழும்பும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 
போதைப்பொருள் பாவனையில் அடிமைப்பட்டிருக்கும்; அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து மக்களும்  ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறிப்பிட்டார். 
 
2015ம் ஆண்டில் யாழ்.மாவட்ட மக்கள் போதைப்பொருள் பாவனைக்காக 2200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளனர். இந்த வருடத்தில் ஆரம்ப முதல் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படட போதைப்பொருள் முற்றுகையின் மூலம் 194கிலோ கேரள கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது. இது தொர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் 20 தொடக்கம் 25 க்கு வயதிற்கு உட்பட்வர்களாவார். கடுமையான சட்டங்கள் சட்டவிதிகள் சட்டக்கொள்கை மூலம் மாத்திரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போரை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறினார். போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபடுவோர் தொடர்பாக சமூகத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுமாயின் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோரை ஏதோவொரு வகையில் முற்றாக அழிவிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். 
 
போதைப்பொருள் ஒழிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோக பூர்வ இலச்சினை ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. போதைப்பொருள் இல்லாது ஒழிப்பதற்காக  அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிஸ்; திணைக்களம், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விருதுகளும் வழங்கி கௌரவித்தார் 
 
இந் நிகழ்வில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்க , இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் , மகளிர் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் , வடக்கு மாகாணத்தின் மாவட்ட செயலாளார்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

Post a Comment

0 Comments