Ticker

6/recent/ticker-posts

நெதர்லாந்து இலங்கையின் சிறுநீரக நோய் தடுப்புக்கு உதவும்

இலங்கையின் சிறுநீரக நோய் தடுப்பு முயற்சிகளுக்கு நெதர்லாந்து உதவுவதற்கு முன்வந்துள்ளது.
 இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் பெருமளவில் காணப்படும் பிரதேசங்களில் நெதர்லாந்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஜோன் டொன்வர்ட்டுக்கும் இடையில் இலங்கை சிறுநீரக நோய் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் இந்த உறுதிமொழியை தெரிவித்தார். 
 
இதேவேளை  இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நோய் தடுப்பு முயற்சிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments