Ticker

6/recent/ticker-posts

பரிஸ் ஒப்பந்தத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல்!

காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணை மீதான விவாதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.
 
குறித்த பிரேரணை  ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்து அங்கீகரிக்க தீர்மானிக்கப்பட்டு,  இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
 முழுநாள் விவாதத்தை பிரதமர் ஆரம்பித்து வைத்ததுடன், ஆளும் கட்சி,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
 
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கொள்கைத்திட்ட மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.
 
பரிஸ் ஒப்பந்தத்தை அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் அங்கீகரிக்க வேண்டும். இதற்கமையவே இன்று இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
 
சுற்றாடல்துறை அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லவுள்ளார்.
 
அதற்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கத் திட்டமிட்டிருந்ததாக பிரதமர் கூறினார்.
 
வளிமண்டத்தில் வெளியிடப்படும் கார்பனின் அளவைக் குறைப்பது தொடர்பில் பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகளால் இணக்கம் காணப்பட்டுள்ளன.
 
குறிப்பாக உலக வெப்பநிலை அதிகரிப்பை 2 செல்சியசால் குறைப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

Post a Comment

0 Comments