2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.elections.gov.lk என்ற இணையத்தினூடாக வாக்காளர்கள் தமது பெயர் விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று தேர்தல் ஆணைக்குழு தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் இடாப்பு ஒவ்வொரு மாவட்ட செயலகம்ஃமாவட்ட தேர்தல்கள் அலுவலகம், மாகாண பிரதான செயலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி நிறுவனம், கிராம உத்தியோகத்தர்கள் அலுலகங்கள் ஆகியவற்றில் இம்மாதம் முதல் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 28ம் திகதி வரை பார்வையிட முடியும்.
வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இடம்பெறாத பட்சத்தில் குறிப்பிட்ட இவ் அலுவலகங்களில் இதற்கான படிவங்களை பெற்று தமது பெயர்களை பதிவுசெய்ய வாக்காளர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தகைமையற்றவர்களின் பதிவுகள் தொடர்பான ஆட்சேபனைகளையும் சமர்பிக்க முடியும். என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

0 Comments