பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த கொலை விசாரணை நடவடிக்கைகளின் விரைவு தன்மை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் வருத்தத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரையில் குறித்த சம்பவம் தொடர்பில் ராஜபக்ச ரெஜிமென்ட் உறுப்பினர்கள் பலரின் பெயர்கள் தெளிவாக சாட்சியுடன் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை போன்று தனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தூக்கு மேடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என மஹிந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடுமையாக மஹிந்த ராஜபக்ச பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2012ம் ஆண்டு தாஜுடீனின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் மஹிந்தவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ராஜபக்ஷ நேரடி தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. tamilwin.com

0 Comments