(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கஹடோவிட்ட மீடியா சேர்கிளின் புதிய உறுப்பினர் தெரிவு அண்மையில் இடம்பெற்றது. கஹட்டோவிட்ட, அண்மையிலுள்ள முஸ்லிம் கிராமங்கள், கம்பஹா மாவட்டம் தழுவிய பல்வேறு ஊடக மற்றும் பொதுப் பணிகளை நோக்காகக் கொண்டு மீடியா சேர்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (25), கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் சேர்கிள் தாருஸ்ஸலாம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக்கருத்தரங்கு, மாதாந்த பகிரங்க சொற்பொழிவு, கம்பஹா மாவட்டம் தழுவிய மாதாந்த சஞ்சிகை வெளியிடல், ஊடக ஆய்வு மையம் உருவாக்குதல் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
கஹட்டோவிட்ட மீடியா சேர்க்கிள் புதிய அங்கத்தவர்களாக,
தலைவர் - எம்.இஸட்.அஹமத் முனவ்வர் (முன்னாள் பணிப்பாளர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை), உபதலைவர் - ஸிராஜ் எம்.சாஜஹான் (செய்தி ஆசிரியர், நவமணி), செயலாளர்- பியாஸ் முஹம்மத் (ஆசிரியர், மீள்பார்வை), உதவிச் செயலாளர் - பஸ்ஹான் நவாஸ் (செய்தி ஆசிரியர், இலங்கை வானொலி) , பொருளாளர் - மௌலவி அப்துல் முஜீப் ஸாலி(சுதந்திர ஊடகவியலாளர்), உதவிப் பொருளாளர் ஆசிரியர் எம்.எம்.முஹீதீன் (சிரேஷ்ட ஊடகவியாலாளர்) ஆகியோரும்
மற்றும்
குழு உறுப்பினர்களாக,
றிஸ்மி ஹக்கீம் (பொது நிர்வாக அமைச்சு, ஊடகவியலாளர்), அமீர் ஹம்ஸா (சிரேஷ்ட ஊடகவியலாளர்), ரிகாஸ் அலி (இலங்கை பாராளுமன்றம்), பிர்தௌஸ் முஹம்மத்(நளீமி) (குவைத் தூதரக ஊடக அதிகாரி), பௌஸியா ரசீத், பயாஸ் பாரூக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments