(க.பொ.த) உயர்தர பரீட்சை பெறுபேறு கிடைக்காததன் காரணத்தால் மாணவி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தவராஜா மஞ்சுளா (வயது – 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கல்விப் பொதுதத்தராதரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணத்தால் தான் தற்கொலை செய்வதாகவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் எழுதியுள்ள கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிரவீன் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments