Ticker

6/recent/ticker-posts

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த முடியாது; பாகிஸ்தான் திட்டவட்டம்

பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு  மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுதன் மூலம் சர்வதேச சட்டம் மீறப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
சர்வதேச சமூகத்தை மதிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும் அசாதாரணமான சூழ்நிலைகளை நாடு கடந்து செல்வதால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments