Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க பொலிஸார்; மீது துப்பாக்கி வேட்டு! கருப்பின இளைஞனின் பழிக்குப் பழி



கருப்பின இளைஞர்களை அமெரிக்க போலீஸார் சுட்டுக் கொன்றதற்கு பழிக்குப் பழியாக இரண்டு போலீஸ் அதிகாரிகளை கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

அமெரிக்காவின் பெர்குஸன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மைக்கல் பிரவூன் என்ற 18 வயது கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

அடுத்த சம்பவம் நியூ+யார்க் நகரில் இடம்பெற்றது. கடந்த நவம்பா; மாதம் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக கருப்பினத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் என்பவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸார் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்கள் பல்வேறு போராட்டங்களை தொடராக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நியூ+யார்க் நகரில் புருக்ளின் பகுதியில் நேற்று காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரபேல்இ வென்ஜியான் லீ ஆகிய 2 போலீஸ் அதிகாரிகளை கருப்பின இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தப்பியோட முயற்சித்து விட்டு இயலாத தருணத்தில் அந்த இளைஞரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில் 28 வயதான இஸ்மாயல் பிரின்ஸ்லே  என்ற அந்த இளைஞர்இ பழிக்குப் பழியாக போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.

அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்இ கருப்பின இளைஞர்களை சுட்டுக் கொன்ற போலீஸாருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்இ நம்மில் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றால் அவர்களில் 2 பேர் பலியாக வேண்டும். இதுதான் எனது கடைசி பதிவூ என்று தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து நியூ+யார்க் போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போதுஇ இஸ்மாயில் பிரின்ஸ் லேவின் இன்ஸ்டாகிராம் பதிவை மோப்பம் பிடித்த போலீஸார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அதற்குள் அவர்இ இரண்டு பொலிஸ் அதிகாரிகளையூம் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த பொலிஸ்;காரர் வென்ஜியான் லீக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில்இ இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றி ருப்பது மிகவூம் கோழைத்தனமான செயல்இ நாம் இரண்டு வீரர்களை இழந்துவிட்டோம்இ அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்று கூறியூள்ளார்.


Post a Comment

0 Comments