Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள சிந்து மாகாணத்தில் முஸ்லீம்களின் பள்ளிவாசலில் இன்று பிற்பகல்  இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 55 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஷிகர்பூர் நகரின் லகிடார் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் தொழுகைக்கு வந்திருந்தனர். அப்போது தான் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் எப்படி நடந்தது என்ற விவரம் முழுதாக தெரியாத நிலையில் பாகிஸ்தானின் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தற்கொலை படைத்தாக்குதல் நடந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சிந்து மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஸாம் மெக்தாப் கூறுகையில், இத்தாக்குதலில் 20 பேர் பலியானர்கள். மேலும் 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றார். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments