Ticker

6/recent/ticker-posts

400 மில்லியன் ரூபா இலாபம் பெற CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கை?

CSN தொலைக்காட்சி நிறுவனம் பிரபல வர்த்தகர்களுக்கு
கிங்ஸ்பெரி ஆடம்பர விடுதியில் நேற்று முன்தினம் இரவு (27) விருந்தளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை ஒளிபரப்புவதற்கான உத்தியோகபூர்வ உரிமத்தை CSN தொலைக்காட்சி பெற்றுக்கொண்டதைக் கொண்டாடவே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக விளம்பரங்களைப் பெற்றுத் தருமாறு இதன்போது வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் 160 பேர் வரை நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் குறித்த தொலைக்காட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 6 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பின் ஊடாக சுமார் 400 மில்லியன் ரூபா வரை நிகர இலாபம் பெறுவதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments