Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தலின்போது செய்தி சேகரிக்க சனல் - 4 க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது -

லங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச ஊடகங்கள் பலவும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் செய்தி வெளியிட ஆர்வம் காட்டுகின்றன. 

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதென பிரித்தானியாவைச் சேர்ந்த சனல் 4 ஊடகத்துக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.

 
கடந்த காலங்களில் குறித்த சனல் 4 ஊடகமானது இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்து அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகாரஅமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
 
எனவேதான் இலங்கைக்குள் பிரவேசிக்க சனல் 4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த தொலைக்காட்சி தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செய்திகளை வெளியிட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி கோரியுள்ள நிலையில் அந்த நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின்போது வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பது என்பது இலங்கையில் எத்தகைய ஊடக சுதந்திரம் நிலவுகிறது என்பதை வெளிக்காட்டும் யதார்த்தம் என்று சிரேஷ்ட ஊடகவியாளர் ஒருவர் கூறுகிறார். 

தேர்தலின்போது மோசடிகள் இடம்பெறலாம் என்பதனாலும் முடிவுகள் வன்முறைகளையும் பாரிய மாற்றங்களையும் உருவாக்கலாம் என்பதனால் சர்வதேச மத்தியில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்த கவனம் ஏற்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments