செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது ஆரம்ப அறிக்கையில், ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்திருந்தது.
நேற்று மாலை இராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், உயரமான நிலப்பரப்பில் பூஜ்ஜிய வெப்பநிலையில் (Zero Temperatures) நடந்த மோதலில் 17 இந்திய வீரர்கள் கடுமையாக காயமடைந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர் எனக் கூறப்பட்டு உள்ளது.
இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்கள், கம்பி மற்றும் ஆணி பதித்த ஆயுதங்களால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கிக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு படைகளும் கைகளினால் சண்டை இடுவது அல்லது கற்கள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி அந்த பகுதியில் ஒருவருக்கொருவர் தாக்குவது இதுவே முதல் முறை அல்ல என்றும் கூறப்படுகிறது.

0 Comments