Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ஷவுக்கு போட்டியாக $8000 கோடி டொலா்களை சுருட்டிய 20 முன்னாள் அமைச்சர்கள் !

லங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ஷ  குடும்பத்தினர் சுருட்டிய ரூ.13 ஆயிரம் கோடியைத் தொடர்ந்து அவரது ஆட்சியின் போது மேலும் 8 ஆயிரம் கோடி டொலா்களை விழுங்கி ஏப்பம் விட்ட 20 அமைச்சர்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித்  தேர்தலில் ராஜபக்ஷ படுதோல்வியை தழுவினார்.

மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று ஜனாதிபதியானதைத் தொடா்ந்து பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.  தேர்தலின் இறுதி நேரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தி ராணுவத்தின் துணையுடன் ஆட்சியை தக்க வைக்க ராஜபக்ஷ முயன்றதாக புதிய அரசு குற்றம் சாட்டி  விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதுதவிர ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள், வன்கொலைகள், மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் போன்றவற்றை மைத்ரிபால சிறிசேன அரசு தோண்டி துருவத் தொடங்கிவிட்டது.
புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கைகைள துரிதப்படுத்தி வருகின்றனர். அவர்களது மகன்களின் பாலியல் வன்கொடுமைகள், முறைகேடாக வெளிநாட்டு கார் வாங்கிய விவகாரம், வெள்ளை வேன் மூலம் ராணுவம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் செய்த சட்ட விரோத கொலைகள் என்று அடுக்கடுக்காக புகார்கள் பாய்ந்து வருகின்றன.
மேலும் அலாி மாளிகையில் ராஜபக்ஷ பதுக்கிய 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் கருவூலத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் கோடியை ராஜபக்ஷ குடும்பத்தினர் சுருட்டியதும் அம்பலமானது. இதனையடுத்து நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்த மைத்ரிபால சிறி சேன அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜபக்ஷவைத் தொடர்ந்து அவரது ஆட்சியில் 20 அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமைச்சக செயலாளர் அஜித் ஜய சுந்தர கூறுகையில், ராஜபக்சே ஆட்சியில் பதவியில் இருந்த 20 அமைச்சர்கள் ரூ.8000 கோடி மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் கிடைத்துள்ளன.
இதனையடுத்து அவர்கள் மீது லஞ்சம், ஊழல், முறைகேடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்த ஆணைகுழுவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதில் மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் அரசு முடிவு செய்துள்ளது என்று அஜித் ஜய சுந்தர தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் நாட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments