Ticker

6/recent/ticker-posts

10 கடவுச் சீட்டுக்களுடன் 24 பெயா்களில் உலாவந்த கே.பி.: திடுக்கிடும் தகவல்!

மிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுதப் பொறுப்பாளரும், பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு புலிகளின் தலைவரென்று அறிவிக்கப் பட்வருமான கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் 24 பெயர்களில் செயற்பட்டுவந்ததாகவும் பத்து கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்திவந்ததாகவும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினர், புதிய அரசாங்கத்திற்கு இந்த தகவல்களை அறிவித்துள்ளனர்.
இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பத்து நாடுகளின் கடவுச் சீட்டுக்களை குமரன் பத்மநாதன் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சா்வதேச குற்றவாளிகள் பட்டியலிலிருந்த குமரன் பத்மநாதனை கடந்த மஹிந்த அரசாங்கம் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவே கருதி மதிப்பளித்து வந்தது. அவாிடமிருந்த கோடிக்கணக்கான புலிகளின் சொத்துக்களை ராஜபகஷ குடும்பம் ஏப்பம் விட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.
குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி தனாவதி சுதியானோ பல தடவைகள் வன்னிக்குச் சென்றுள்ளார்.
கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சுதியானோ இவ்வாறு வன்னிக்குச் சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துள்ளார்.
மலேசியாவின் விக்ரம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக பத்மநாதன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமரன் பத்மநாதன் கதில் சதில் மொஹமத் என்ற பெயரில் எகிப்து நாட்டு கடவுச்சீட்டு ஒன்றை வைத்திருந்தார் என குறிப்பிடப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=l2HD5n_7Fc4

https://www.youtube.com/watch?v=dII0KL6zbEo

https://www.youtube.com/watch?v=7p5ED_f2y1U






Post a Comment

0 Comments