இந்தியா செல்லவுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிடும் எண்ணத்தை இறுதி நேரத்தில் கைவிட்டுள்ளார்.
இதனை உத்தரப்பிரதேச அரசு உறுதிப் படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்தியா செல்லும் பாரக் ஒபாமா. இவ்விஜயத்தின் போது தாஜ்மகாலையும் சென்று பார்வையிடுவது என அவர் முன்னர் தீர்மானித்திருந்தார்.
இந்நிலையில் பீஹாரில் குண்டுவெடிப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்திருந்தன. ஆனால் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் திடீரென காலமானதை தொடர்ந்து தனது தாஜ்மஹால் விஜயத்தை கைவிட்டு எதிர்வரும் ஜனவரி 27ம் திகதி டெல்லியிலிருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்படுகிறார் ஒபாமா.

0 Comments