கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்பட்ட வரையரைகளை நீக்கவுள்ளதால் நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை மீண்டும் நாடு திரும்புமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுபான்மை தமிழ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என சர்வதேச ஊடகமொன்றுக்கு அழித்த பேட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மாற்றத்திற்கான, நல்லிணக்கத்திற்கான தேர்தல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை கூட்டவுள்ளதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் சீனாவின் அரசாங்கம் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் குறித்து தற்போதைய அமைச்சர்கள் ஆராய்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும் என பிரதமர் கூறியுள்ளார்.

0 Comments