நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந், உள்ளிட்டோருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசினால் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகளை இவ்வாண்டு பெறுவோர் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபரப்பட்டியலில், முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, யோகா குரு ராம்தேவ், மற்றும் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு இவ் விருதுகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது பொது வாழ்க்கையில் நாட்டின் சிறப்புக்கு பங்காற்றிய பல்வேறு துறைசார்ந்தவர்களுகளைக் கௌரவிக்கும் வகையில், இந்தப் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.இவ் விருதுக்காக மேலும் தெரிவு செய்யபட்டிருப்பவர்களில், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நடிகர்கள் திலிப்குமார், திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ஹாக்கி அணியின் கேப்டன் சர்தாரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, செஸ் கிராண்ட் மாஸ்டர் கிருஷ்ணன் சசிகிரண், மல்யுத்த வீரர் சுஷில்குமார், இஸ்ரோ விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய், செய்தியாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, ஹரி சங்கர் வியாஸ், மறைந்த நடிகர் பிரான், பாடகி சுதா ரகுநாதன், இசையமைப்பாளர்கள் அனு மாலிக், இயக்குனர் ஜாஹ்னு பருவா, எழுத்தாளர் மனோஜ் தாஸ் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடக்கும் இந்தியக் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு இவ்விருதை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

0 Comments