இலங்கை கிரிக்கட் மற்றும் தேசிய விளையாட்டு திணைக்களங்களில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்து அவை தொடர்பாக முறையிட விளையாட்டுத்துறை அமைச்சர் நவின் திசாநாயக்கவிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுள்ளார் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி.
கடந்த கால முறைகேடுகள் குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்குமிடத்து விளையாட்டுத்துறை சார்ந்த திணைக்களங்கள் எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்திருந்ததைத் தொடர்ந்தே இவ்வாறு தனக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கோரியுள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர், தன்னிடம் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாகவே இலங்கை கிரிக்கட் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தமையும் சிரேஸ்ட விளையாட்டு வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட முக்கிய வீரர்கள் பாரிய அழுத்தங்களுக்குள்ளாகி வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments