யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை அப்பதவிகளிலிருந்து வெளியேறுமாறு கோரும் பகிரங்க பதாதைகள் இன்று யாழ்.பல்கலைக்கழக சூழலெங்கும் தொங்கவிடப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இப்பதாதைகள் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
முன்னதாக ஈபிடிபி சார்பு வெளிவாரி பேரவை உறுப்பினர்களை அப்பதவிகளிலிருந்து வெளியேறுமாறு ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமென பல தரப்புக்களும் தொடர்ச்சியாக வேண்டுகோளை விடுத்து வந்திருந்தன.
எனினும் அப்பதவிகிளிலிருந்து வெளியேறமாட்டோமென கூறியவாறு பேரவை உறுப்பினர்கள் கதிரைகளினை கட்டிப்பிடித்தவாறு உள்ளதாக ஊழியர் சங்கம் பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.அத்துடன் அவர்கள் அப்பதவிகளிலிருந்து விலகாவிடின் பல்கலைக்கழக செயற்பாடுகளை முடங்க வைக்கும் வiகியினில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது அவர்களை குறித்த பதவிகளிலிருந்து வெளியேறக்கோரும் பதாதைகள் பல்கலைக்கழகமெங்கும் தொங்கவிடப்பட்டுள்ளது.

0 Comments