Ticker

6/recent/ticker-posts

மிஹின் லங்கா விமானத்தின் மர்மப் பயணம்!

நேற்று(06)  கட்டுநாயக்கவிமான நிலையத்தில் இருந்து சீஷெல்ஸை நோக்கி  மிஹின் லங்கா விமானமொன்று பறந்தது. இதில் பயணிகள் யாரும் இருக்கவில்லையென்றும் இரகசியமாக பேணப்படவிருந்த இப்பயணம் வெளியே கசிந்தது தொடர்பில் இதில் ஈடுபட்ட கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகள் விசாரணை நடாத்தி வருகின்றனர். 

மேற்படி விமானம் பயணத்தின் போது தரைக்கட்டுப்பாட்டு மைய சமிக்ஞைகளை துண்டித்துத்கொண்டு பயணத்தை மேற்கொண்டதால் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் எவரும் பயணிக்காத மேற்படி விமானத்தில் பெறுமதிவாய்ந்த ஏதேனும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. சீஷெல்ஸ் ஆனது சர்வதேச சட்டவிரோத வியபாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளும் கடத்தற்காரரர்களும் தமது செல்வங்களை சேமித்து வைக்க பயன்படும் ஒரு நாடாகும். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி தமது தனிப்பட்ட சுற்றுலாப் பயணங்களை சீஷெல்ஸ் தீவுகளுக்கே  மேற்கொண்டுவந்தனர். 


Post a Comment

0 Comments