வீர தீர செயல்களுக்கான குடியரசு தின விருது பெற்ற கர்னல் முனீந்திர நாத் ராய் மறு தினமே காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்தார். காஷ்மீரில் உள்ள கூர்கா ரைபிள் படையில் கர்னலாக பணியாற்றியவர் முனீந்திர நாத் ராய். ராணுவத்தில் இவரது திறமையை பாராட்டி வீர தீர செயல்களுக்காக குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும் இளைஞர் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் பெற்ற மறு தினமே மீண்டும் அவர்
பணியை தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள ஹந்தோரா என்ற இடத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இவரது தலைமையின் கீழ் கூர்கா ரைபிள் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இவர்களுக்கு துணையாக ஜம்மு காஷ்மீர் போலீசாரும் அங்கு சென்றனர்.
அங்கு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் கர்னல் முனீந்திர நாத் ராய் மற்றும் ஏட்டு சஞ்சீவன் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், முனீந்திர நாத் ராய்க்கு பிரியங்கா என்ற மனைவியும், அல்கா, ரிச்சா என்ற மகள்களும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். பதக்கம் பெற்ற மறு தினமே முனீந்தர நாத் வீர மரணம் அடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார். மேலும் இந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளின் தளபதியும் அவனது கூட்டாளியும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments