Ticker

6/recent/ticker-posts

ஈரானின் உமாஓய திட்டத்தை உடன் நிறுத்தவும் - மக்கள் கோாிக்கை

ஈரான் நாட்டு உதவியுடன் நடைபெற்று வரும் உமாஓய நீா் மின் திட்டத்தை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோாிக்கை விடப்பட்டிருக்கிறது.  சூழலை அதிகமாக பாதிக்கும் இந்தத் திட்டத்தால் எகொடகம, வெஹரகலதென்ன, மகுல்எல்ல போன்ற கிராமங்களின் 140க்குமதிகமான கிணறுகள் வற்றி இருப்பதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறது.


நிலத்தடியில் தோண்டப்படும் பாாிய குழிகளாலும்,  தோண்டப்படும் சுரங்கப் பாதைகளாலும், இரசாயண வெடி பொருட்களாலும் இப்பகுதியின் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

சூழலை மாசுபடுத்தும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்தும் படியும் இல்லாவிட்டால் மாற்று வழிகளை கையாலும் படியும் ஊவா மாகாண முதலமைச்சா் ஹாீன் பொ்ணாண்டோ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விதித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

வெலிமட ஊவபரனகமவில் ஆரம்பித்து எல்ல, வெள்ளவாய ஊடாக நீண்ட சுரங்கப்பாதைகள் மூலம் சென்றடையும் இந்தத் திட்டம் தொடா்பாக எவ்வித தொழில்நுட்ப சான்றுகளும் இதுவரை பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments