ஐநா தூதர் ஒருவரை விபசாாி என்றும், பெண் நாய் என்றும் தாக்கி, பர்மிய புத்த பிக்குவான அசின் விராது பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி பர்மிய மியன்மார் அரசு விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.
அஷின் விராது என்ற பிக்கு இந்தக் கருத்துக்களை யாங்கி லீ என்ற இந்த ஐநா மன்றத் தூதரை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் வெளியிட்டுள்ளாா்.
பர்மாவின் முஸ்லீம் சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்த நாட்டுக்கு கடந்த வாரம் மேற்கொண்ட ஒரு விஜயத்தின் போது யாங்கி லீ கோடிட்டுக் காட்டினார்.
மியன்மார் அரசின் தகவல் துறை அமைச்சர் , இந்த பிக்குவின் உரையை ஆராய்ந்து பார்க்குமாறு மத விவகார அமைச்சகத்திடம் தான் கோரியிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இந்தப் பிக்குவின் கருத்துக்கள் குறித்த விமர்சனங்கள் மெலிதாகவே ஒலிக்கின்றன. ஏனென்றால், நாட்டின் சக்தி மிக்க பிக்குகள் தங்களுக்கு எதிராகத் திரும்புவதை பா்மிய அரசு விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சா்ச்சைக்குரிய பிக்கு பொதுபலசேனாவின் அழைப்பின் போில் இலங்கைக்கு விஜயம் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments