Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்த செலிங்கோ சொத்துக்கள்

கோல்டன் கீ கடனட்டை மோசடி (26 பில்லியன்) தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த செலிங்கோ நிறுவன தலைவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து வந்த நிலையில் தன் சொத்துக்கள் மீது கண்வைத்த ராஜபக்ச குடும்பம் தன்னைக் குற்றவாளியாக்கி தன் சொத்துக்களையும் கொள்ளையடித்தது என தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்த அவர், தனது கட்டுப்பாட்டில் 450 நிறுவனங்கள், 45,000 ஊழியர்கள் மற்றும் 15 வெளிநாட்டு அலுவலகங்களும் இருந்ததாகவும் குறித்த விவகாரத்தில் செலிங்கோவிலிருந்து மூன்றரை வருடங்களுக்குள் 13 பில்லியனைப் பெற்று திருப்பிச் செலுத்தும் திட்டத்தினை நீதிமன்றில் ஒப்படைத்ததோடு ஆரம்பத்தில் 200 மில்லியன் காசோலை  செலுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தன் சொத்துக்கள் மீது கண் வைத்த ராஜபக்ச குடும்பம் தன்னைப் பாதுகாப்பதாகக் கூறி சிறைக்கு அனுப்பி தனது சொத்துக்களை அபகரித்துக்கொண்டதாகவும் 10 பில்லியன் முதலீட்டில் தான் ஆரம்பித்த ஹயாத் ரீஜன்சி நட்சத்திர ஹோட்டல் உரிமையையும் பசில் ராஜபக்ச அபகரித்துக்கொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
தனது வழக்கு தொடர்பான தீர்ப்பையும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய சகாவான தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிசே வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதன் மூலம் செலான் வங்கி முதல் தனது சம்பளம் வரை அனைத்தையும் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments