Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் இராணுவம் கைபர் பழங்குடியினர் பகுதியில் தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பழங்குடியினர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலில் 31 பயங்கராவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
கைபர் மாகாணத்தில் திரா பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 31பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப் படையினர் நிகழ்த்தி வரும் ஒருங்கிணைந்த தாக்குதல்களில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments