மாயமானதாக கருதப்பட்ட மலேசிய விமானம் MH 370விபத்துக்குள்ளானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH 370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் விமானத்தின் தேடுதல் பணி கைவிடப்பட்டதுடன், இது விபத்துக்குள்ளானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments