Ticker

6/recent/ticker-posts

ரவிராஜ், மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், லசந்த படுகொலைகள் தொடர்பில் மீள் விசாரணை: ராஜித சேனாரத்ன

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தியாராஜா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டவர்களின் படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மீள் விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்தோடு, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments