Ticker

6/recent/ticker-posts

பஸிலின் முக்கிய ஆவணங்கள் பொலனறுவையில்!

ஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்த குடும்பத்தின் ஊழல்கள் நாளுக்கு நாள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. மஹிந்தவின் சகோதரனாகிய பஸில் ராஜபக்ஷவிற்கு ஊழல்கள் தொடா்பாக அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இவாின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இருந்தும் முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுமுள்ளன.
பொலனறுவையில் உள்ள பொருளாதார அமைச்சு பிராந்திய காரியாலயம் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. பொலிஸ் அவசர பிரிவிக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலன்னறுவை பொலிஸார் இரண்டு அறைகளிலிருந்து பெருந்தொகை ஆவணங்களை மீட்டிருக்கின்றனா்.

Post a Comment

0 Comments