அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800 க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாக இதன்போது பொன்சேகா நினைவுகூர்ந்துள்ளாா்.
அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments