Ticker

6/recent/ticker-posts

நண்பா்களின் வீட்டுக்குக் கூட செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபகஷ!

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை வீட்டில் பொலிஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். 

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் மாளிகையில் விலையுயர்ந்த கார்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. 
ஆனால் சோதனையின் போது அப்படி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லெம்போகினி கார் ஒன்றை தேடி பொலிஸார் சோதனை செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  முப்பது வருட யுத்தத்தை நிறைவு செய்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு போலி முறைப்பாடுகளை வைத்து இவ்வாறு தொந்தரவு கொடுப்பதாக நாமல் ராஜபக்ஷ விசனம் தொிவித்துள்ளாா்.

தங்களது வீடுகளை மாத்திரமன்றி நண்பர்களின் வீடுகளையும் சோதனை செய்வதாகவும் அதனால் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாதுள்ளதெனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments