பெங்களூரு எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் ஓசூர் ஆணைக்கல் பகுதி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து காலை 6.30 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு சென்ற இந்த புகையிரதம், காலை சுமார் 7.45 மணி அளவில் ஓசூர் ஆணைக்கல் பகுதி அருகே சென்ற பொது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் பத்து பேர் பலியானதாகவும் மேலும் 100 பேர் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
0 Comments